‘காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை கைவிடக்கோரி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்’; திருமாவளவன் பேட்டி


‘காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை கைவிடக்கோரி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்’; திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 23 Jan 2021 7:20 AM IST (Updated: 23 Jan 2021 7:20 AM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் அதானிக்கு சொந்தமான துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இந்த துறைமுகம் 6 ஆயிரத்து 100 ஏக்கரில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நேற்று நடைபெற இருந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு காரணமாக கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் காட்டுப்பள்ளி அடுத்த செங்கழுநீர்மேடு, பழவேற்காட்டின் லைட்அவுஸ்குப்பம், வைரவன்குப்பம், கோரைக்குப்பம் ஆகிய கிராமங்களுக்கு நேற்று சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது:- பொதுமக்கள் மற்றும் மீனவர்களை பாதிக்கும் துறைமுகத்தின் விரிவாக்க பணிகளை ரத்து செய்ய கோரி நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் எழுப்புவேன்’ என தெரிவித்தார்.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் வன்னியரசு, பாலசிங்கம், நெடுஞ்செழியன், மீஞ்சூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஏழுமலைவாசன், உமாபதி உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story