சீர்காழியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி; காவல்துறை சார்பில் நடந்தன


சீர்காழியில் காவல்துறை சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
சீர்காழியில் காவல்துறை சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
தினத்தந்தி 23 Jan 2021 6:28 AM GMT (Updated: 23 Jan 2021 6:28 AM GMT)

சீர்காழியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல்துறை சார்பில் நடைபெற்றது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமை தாங்கினார். 

சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் சிவகுரு வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பேரணியை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசுகையில், மோட்டார் சைக்கிள் ஓட்டும் வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். இதேபோல் கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கண்டிப்பாக சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும். குறிப்பாக வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். வாகனத்தை ஓட்டும் போது செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. கண்டிப்பாக குடிபோதையில் வாகனங்களை இயக்கக் கூடாது என்றார். தொடர்ந்து ஊர்வலம் பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்தது. இதில் 
பொதுமக்கள், காவல் துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருக்கடையூர்
இதேபோல் திருக்கடையூரில் பொறையாறு போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமை தாங்கினார். சப்- இன்ஸ்பெக்டர்கள் மேகநாதன், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணிவது குறித்தும், சாலை விதிமுறைகளை கடைப்பிடிப்பது பற்றியும் இன்ஸ்பெக்டர் விளக்கி் கூறினார்.

இதனை தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார். இதில் போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story