நெமிலி அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி


நெமிலி அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 23 Jan 2021 5:09 PM IST (Updated: 23 Jan 2021 5:09 PM IST)
t-max-icont-min-icon

நெமிலி அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

நெமிலி,

நெமிலி அடுத்த சம்பத்ராயன்பேட்டை காமராஜர் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் வெங்கடேசன் (வயது 35), நெசவுத் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று காலை கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலம் அருகே சென்றுள்ளார். அப்போது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து வெங்கடேசனின் மனைவி ஜமுனா கொடுத்த புகாரின் பேரில் நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமுத்து ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story