தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டி, விவாத அரங்கம் ஆகியவை திருவண்ணமலை சண்முகா தொழிற்சாலை கலைக்கல்லூரியில் நடந்தது.
திருவண்ணாமலை
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் பிரிவு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டி, விவாத அரங்கம் ஆகியவை திருவண்ணமலை சண்முகா தொழிற்சாலை கலைக்கல்லூரியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு தேர்தல் தாசில்தார் தியாகராஜன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை தாசில்தார் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது தனித் திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டிகளை உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) அஜிதாபேகம், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதேவி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற 29-ந்தேதி நடைபெற உள்ள விழாவில் பரிசு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story