முன்னாள் படைவீரரின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
முன்னாள் படைவீரர்கள் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் வரதராஜன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை,
முன்னாள் படைவீரர்கள் தங்களது சிறார்களுக்கு தொழில் கல்விக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2020-2021-ம் கல்வியாண்டில் தொழிற் கல்வியில் சேர்ந்துள்ள 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் விண்ணப்பிக்கலாம்.
இக்கல்வி உதவித் தொகை முன்னாள் படைவீரர்களின் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் வழங்கப்படும். மேலும் இக்கல்வி உதவித் தொகை குறித்த முழு விவரத்தினை இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.விண்ணப்பங்களை கொடுக்க அடுத்த மாதம் 28-ந் தேதி கடைசி நாளாகும்.
எனவே சிவகங்கை மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையலாம், இது தொடர்பான மேலும் விவரங்களை அறிய சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story