மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் பெண் திட்டம் தொடக்கம்: விடாமுயற்சி, தைரியம் இருந்தால் பெண்கள் சாதிக்கலாம் - கலெக்டர் பேச்சு + "||" + Smart Girl Project Launch: Women Can Achieve With Perseverance and Courage - Collector Talk

ஸ்மார்ட் பெண் திட்டம் தொடக்கம்: விடாமுயற்சி, தைரியம் இருந்தால் பெண்கள் சாதிக்கலாம் - கலெக்டர் பேச்சு

ஸ்மார்ட் பெண் திட்டம் தொடக்கம்: விடாமுயற்சி, தைரியம் இருந்தால் பெண்கள் சாதிக்கலாம் - கலெக்டர் பேச்சு
விடாமுயற்சி, தைரியம் இருந்தால் பெண் குழந்தைகள் சாதிக்கலாம் என்று ஸ்மார்ட் பெண் திட்ட தொடக்க விழாவில் கலெக்டர் பேசினார்.
ஊட்டி,

நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், தேசிய பெண் குழந்தைகள் தினவிழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி ஸ்மார்ட் பெண் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய பெண் குழந்தைகள் தினம் குறைந்து வரும் பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை அதிகப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த ஆண்டின் நோக்கமாகும். நீலகிரி மாவட்டத்தில் பாலின விகிதத்தை அதிகப்படுத்தும் வகையில் அனைத்து தாய்மார்களும் முழுமையாக கண்காணிக்க படுவார்கள்.

கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தொடங்கப்பட்டு உள்ள ஸ்மார்ட் பெண் என்ற திட்டத்துக்காக 12 வயது முதல் 18 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு 2 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமூக சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குழந்தைகளுக்கு என்று தனித்திறமைகள் உள்ளன. படிப்பில் அதிக மதிப்பெண்கள் வாங்கினாலும், விடாமுயற்சி மற்றும் தைரியம் இருந்தால் வாழ்க்கையில் சாதித்து வெற்றி பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப் பட்டது. முன்னதாக தோடர் இன மக்கள் மற்றும் கோத்தர் இன மக்களின் பாரம்பரிய நடனத்தை மாணவிகள் அரங்கேற்றினர். விழாவில் ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பிரபு, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 4,721 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
நீலகிரி மாவட்டத்தில் 4,721 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் பணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
2. நீலகிரி மாவட்டத்தில் 35 கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படும் - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உறுதி
நீலகிரி மாவட்டத்தில் 35 கிராம ஊராட்சிகளுக்கு 14-வது நிதிக்குழு நிதி ஒதுக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உறுதி அளித்தார்.
3. ரூ.28 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
நீலகிரியில் 13 பேருக்கு ரூ.28 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
4. கொரோனா பரவுவதை தடுக்க சுற்றுலா பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கண்காணிப்பு அதிகாரி வேண்டுகோள்
கொரோனா பரவுவதை தடுக்க சுற்றுலா பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கண்காணிப்பு அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10 ஆயிரத்து 396 பேர் விண்ணப்பம் - கலெக்டர் தகவல்
நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10 ஆயிரத்து 396 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.