தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம்


கரூர் தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x
கரூர் தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம்
தினத்தந்தி 24 Jan 2021 3:15 AM IST (Updated: 23 Jan 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கரூர்,

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தொழிலாளர் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் நேற்று மாலை கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு மத்திய, மாநில தொழிற்சங்கங்களின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு எல்.பி.எப். மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமை தாங்கினார். இதில் எல்.பி.எப். மாவட்ட செயலாளர் பழ.அப்பாசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் வடிவேலன் உள்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். முடிவில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

Next Story