சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை


சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 24 Jan 2021 2:40 AM IST (Updated: 24 Jan 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டது.

தேனி, 

உத்தமபாளையம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த அறிவழகன் மகன் அன்புராஜன் (வயது 26). லாரி டிரைவர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.

பின்னர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்புராஜனை கைது செய்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி வெங்கடேசன் நேற்று தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அன்புராஜனுக்கு, பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும், ஆள்கடத்தல் குற்றத்துக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து அன்புராஜனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story