கடையநல்லூர் அருகே மழையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
கடையநல்லூர் அருகே மழையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே மழையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.
நெற்பயிர்கள் சேதம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் கல்லாறு, அரிவாள் தீட்டி ஆறுப்பாசன பகுதியில் சமீபத்தில் தொடர் மழை பெய்தது. இனால் சுமார் 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து உள்ளன. தற்போது நெற்பயிரில் உள்ள நெல் மணிகள் எல்லாம் முளைத்து விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து விவசாயி ஆப்தீன் கூறுகையில், இயற்கையின் சீற்றத்தால் எங்களைப் போன்ற ஏழை விவசாயிகள் கடன் வாங்கி விவசாயம் செய்து வந்தோம். குலை சாய்ந்த நெற்பயிர்கள் தற்போது முளைத்தது விசாயிகளுக்கு மிகப்பெரிய இழப்பாகும். இப்போது ஏற்பட்டுள்ள இழப்புகளை வருவாய் துறையும், வேளாண்மை துறையும் கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கடையம்
இதேபோல் கடையம் அருகே உள்ள கடனா நதி அணை, தருமபுரம் மடம் பகுதியில் நெற்பயிர்கள் மழையால் சேதம் அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனா்.
மழையால் சேதம் அடைந்த பயிர்களை தென்காசி கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன், மாநில வேளாண்மை இயக்குனரக வேளாண்மை உதவி இயக்குனர் அருள் நங்கை, மாநில வேளாண்மை இயக்குனரக வேளாண்மை அலுவலர் வேலவன், வேளாண்மை உதவி இயக்குனர் கடையம் ஏஞ்சலின் பொன்ராணி, பேராசிரியர் ஆறுமுகசாமி உள்பட பலர் பார்வையிட்டனர். பயிர் சேதம் முழுவதையும் கணக்கிட்டு அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story