திருப்பூரில் டெங்கு கொசுவை ஓழிக்க 300 குழுக்கள்
திருப்பூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட 300 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
டெங்கு கொசு ஒழிப்பு பணி
திருப்பூர் மாநகர் பகுதி அதிகம் மக்கள் தொகை கொண்ட பகுதியாக இருந்து வருகிறது. அந்த அளவிற்கு தொழில் நிறுவனங்கள் ஏராளமானவை மாநகர் பகுதிகளில் உள்ளன. தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், குளிர் அதிகமாக நிலவி வருவதுமாக இருந்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு பணிகள் ஒரு புறம் நடந்து வந்தாலும், மறுபுறம் சுகாதாரத்துறை அதிகாரிகள் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கவும், டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தியுள்ளனர். மாநகர பகுதியில் மருந்துகளும் ஆங்காங்கே தெளிக்கப்படுகிறது.
300 குழுக்கள் அமைப்பு
இது குறித்து மாநகர நகர் நல அதிகாரி பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் கூறியதாவது:-
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மும்முரமாக நடக்கிறது. இதற்காக 300 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் தினமும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சென்று ஆய்வு செய்து, மருந்து தெளித்து வருகிறார்கள்.
இதுதவிர பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள் போன்றவை நீண்ட மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதால், அங்கு சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். இது தவிர மருந்து புகையும் அடிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த காலங்களில் அதிகமாக இருந்துள்ளது. தற்போது இவற்றை கட்டுப்படுத்த முன்கூட்டியே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story