மாவட்ட செய்திகள்

ஓய்வுபெற்ற போலீஸ்காரர் மனைவி, மகனுடன் தற்கொலை + "||" + Retired Policeman wife, Suicide with son

ஓய்வுபெற்ற போலீஸ்காரர் மனைவி, மகனுடன் தற்கொலை

ஓய்வுபெற்ற போலீஸ்காரர் மனைவி, மகனுடன் தற்கொலை
சாங்கிலியில் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் தனது மனைவி, மகனுடன் தற்கொலை செய்து கொண்டனர்.
புனே, 

சாங்கிலி மாவட்டம் பேலங்கி கிராமத்தை சேர்ந்தவர் அன்னாசோ காவனே (வயது65). இவர் புனேயில் போலீஸ்காரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி மலன் (50), மகன் முகேஷ் இருந்தனர். நேற்று அவரது வீட்டில் யாரும் வெளியே நடமாடவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு அன்னாசோ காவனே, மனைவி மலன், மகன் முகேஷ் ஆகிய 3 பேர் தூக்கு கயிற்றில் தொங்கி கொண்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் போலீசார் அங்கு சென்று தூக்கில் தொங்கிய 3 பேரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் 3 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் மகன் முகேஷ் பங்குசந்தையில் செய்த முதலீடு பெரும் நஷ்டத்தை சந்தித்ததாகவும், இதனால் மனமுடைந்து 3 பேரும் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இருப்பினும் அவர்களின் தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.