குடவாசல் ஒன்றியத்தில் 14 பேருக்கு கொரோனா சுகாதார பணிகள் தீவிரம்
குடவாசல் ஒன்றியத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குடவாசல்,
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தை சேர்ந்த குடவாசல், சேங்காலிபுரம், அதம்பார் ஆகிய இடங்களில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடவாசலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர், சிமிழி பகுதியில் பாதிக்கப்பட்ட 2 பேர், சேங்காலிபுரத்தில் ஒருவர், அதம்பார் பகுதியில் 9 பேர் என மொத்தம் 14 பேரை குடவாசல் வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி, நன்னிலம் தாசில்தார் லஷ்மிபிரபா, குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுகாதார பணிகள்
அதம்பார் பகுதியில் ஊராட்சி தலைவர் கவிதா மற்றும் ஊராட்சி பணியாளர்கள் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களிலும் கிருமி நாசினி மருந்து தெளித்து சுகாதார பணிகளில் ஈடுபட்டனர். மேலும் அதம்பார் ஊராட்சியில் ஜெகநாதபுரம் கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக கலெக்டர் உத்தரவின் பேரில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிக்கு வெளியூர் நபர்கள் வரவோ, இங்கு உள்ள நபர்கள் வெளியில் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதைப்போல குடவாசல், சிமிழி, சேங்காலிபுரம் ஆகிய பகுதிகளும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story