மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனிஇன்று நடக்கிறது


மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனிஇன்று நடக்கிறது
x
தினத்தந்தி 24 Jan 2021 10:31 AM IST (Updated: 24 Jan 2021 10:31 AM IST)
t-max-icont-min-icon

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

நாகர்கோவில்,

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் திருவிழாவான நேற்று காலை 6 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி குழித்துறை மறைமாவட்ட பொருளாளர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்றது. மைலோடு பங்குத்தந்தை ரோமரிக் ததேயுஸ் மறையுரையற்றினார்.

58 சிறுவர்கள் முதல் திருவிருந்து பெற்றனர். மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, சிறப்பு மாலை ஆராதனை காரங்காடு மறைவட்ட முதல்வர் ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது. மாங்குழி பங்குத்தந்தை விஜின் மறையுரையற்றினார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி, வாணவேடிக்கை நடைபெற்றது.

தேர் பவனி

10-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5.30 மணிக்கு திருவிழா முதல் திருப்பலியும், காலை 8.30 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலியும், மதியம் 1 மணிக்கு தேர் பவனியும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெயக்குமார், இணை பங்குத்தந்தை ஷிஜின், துணைத்தலைவர் சகாய பால் ததேயுஸ், செயலாளர் புஷ்பாஸ், துணைச் செயலாளர் ஆகனல் வினு, பொருளாளர் பபியோன்ராஜ், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு இறைமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story