மாவட்ட செய்திகள்

வாக்காளர் தினத்தையொட்டி சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர் + "||" + Collector who raised awareness by cycling on Voter Day

வாக்காளர் தினத்தையொட்டி சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்

வாக்காளர் தினத்தையொட்டி சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
வாக்காளர் விழிப்புணர்வு தினத்தையொட்டி கலெக்டர் அரவிந்த் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நாகர்கோவில்,

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினத்தையொட்டி நாகர்கோவிலில் நேற்று சைக்கிள் பேரணி நடந்தது. பேரணிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கியதோடு பேரணியையும் தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியானது டதி பள்ளி சந்திப்பு, கோர்ட்டு ரோடு வழியாக வேப்பமூடு பூங்கா முன் வந்து முடிவடைந்தது.


இந்த பேரணியில் கலெக்டர் அரவிந்தும் பங்கேற்று சைக்கிள் ஓட்டிச் சென்றார். டி-சர்ட் அணிந்து கொண்டு பேரணியில் முதல் ஆளாக அவர் சென்றார்.

பதாகைகள்

அவருடன் வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆ‌ஷா அஜித், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, மாவட்ட வழங்கல் அதிகாரி சொர்ணராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி டேவிட் டேனியல், தேர்தல் தனி தாசில்தார் சேகர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் சைக்கிள் ஓட்டினர்.

பேரணியாக சென்றவர்கள் தங்களது சைக்கிளின் முன் “வாக்களிப்பது உரிமை, வாக்களிப்பது கடமை, ஒற்றை விரல் நீல மையால் உரிமையை மீட்போம்” என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு இருந்த பதாகைகளை வைத்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆர்யாவின் 400 கி.மீ. தூர சைக்கிள் பயணம்
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகனான ஆர்யா உடற்பயிற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். அத்துடன் சைக்கிள் பந்தய வீரராகவும் இருக்கிறார்.
2. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாகையில், தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த முயற்சி
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாகையில், தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. டெல்லி போராட்டம்: விவசாயிகளுக்கு ஆதரவாக மராட்டியத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணி
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மராட்டியத்தில் நாசிக் நகரில் இருந்து மும்பை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக புறப்பட்டு சென்றனர்.
4. கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார்சைக்கிள் பேரணி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார்சைக்கிள் பேரணியை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
5. ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
விழுப்புரத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணிநடந்தது.