மதுரை கோட்டத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களின் சேவை நீட்டிப்பு
தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்களின் சேவை வருகிற மார்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் மாவட்டங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களின் சேவை மாதந்தோறும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. இதில் சில சிறப்பு ரெயில்கள் இந்த மாத இறுதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்களின் சேவை வருகிற மார்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக மும்பை செல்லும் ரெயில் (வ.எண்.06352) வருகிற 4-ந் தேதி முதல் மார்ச் மாதம் 28-ந் தேதி வரை இயக்கப்படும். மறுமார்க்கத்தில், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மும்பையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் செல்லும் ரெயில் (வ.எண்.06351) வருகிற 5-ந் தேதி முதல் மார்ச் மாதம் 29-ந் தேதி வரை இயக்கப்படும்.
மதுரையில் இருந்து வியாழக்கிழமைகளில் ராஜஸ்தான் மாநிலம் பிகானீருக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ.எண்.06053) வருகிற 4-ந் தேதி முதல் மார்ச் மாதம் 25-ந் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிகானீரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ.எண்.06054) வருகிற 7-ந் தேதியில் இருந்து மார்ச் மாதம் 28-ந் தேதி வரை இயக்கப்படும்.
ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக வெள்ளிக்கிழமைகளில் ஓகாகோட்டைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ.எண்.06733) வருகிற 5-ந் தேதி முதல் மார்ச் மாதம் 26-ந் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் செவ்வாய்க்கிழமைகளில் ஓகாகோட்டையில் இருந்து மதுரை வழியாக ராமேசுவரம் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ.எண்.06734) வருகிற 9-ந் தேதி முதல் மார்ச் மாதம் 30-ந் தேதி வரை இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லையில் இருந்து கேரளா வழியாக பிலாஸ்பூருக்கு இயக்கப்படும் ரெயில் (வ.எண்.06070) வருகிற 7-ந் தேதி முதல் மார்ச் மாதம் 28-ந் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் செவ்வாய்க்கிழமைகளில் பிலாஸ்பூரில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் ரெயில் (வ.எண்.06069) வருகிற 9-ந் தேதி முதல் மார்ச் மாதம் 30-ந் தேதி வரை இயக்கப்படும்.
புதன்கிழமைகளில் நெல்லையில் இருந்து மதுரை வழியாக தாதருக்கு இயக்கப்படும் ரெயில் (வ.எண்.06072) வருகிற 3-ந் தேதி முதல் மார்ச் மாதம் 31-ந் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் வியாழக்கிழமைகளில் தாதரில் இருந்து மதுரை வழியாக நெல்லைக்கு இயக்கப்படும் ரெயில் (வ.எண்.06071) வருகிற 11-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 1-ந் தேதி வரை இயக்கப்படும்.
அதாவது, மேற்கண்ட சிறப்பு ரெயில்கள் அனைத்தும் வருகிற மார்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில்களில் வழக்கம்போல, பொதுப்பெட்டிகள் உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும்
Related Tags :
Next Story