நாக்பூரில் சர்வதேச உயிரியல் பூங்கா முதல்-மந்திரி நாளை திறந்து வைக்கிறார்


நாக்பூரில் சர்வதேச உயிரியல் பூங்கா முதல்-மந்திரி நாளை திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 25 Jan 2021 4:02 AM IST (Updated: 25 Jan 2021 4:02 AM IST)
t-max-icont-min-icon

நாக்பூரில் பால் தாக்கரே சர்வதேச உயிரியல் பூங்காவை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நாளை திறந்து வைக்கிறார்.

மும்பை, 

நாக்பூரில் கோரேவாடா உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தற்போது பாலாசாகேப் தாக்கரே கோரேவாடா சர்வதேச உயிரியல் பூங்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பூங்காவை நாளை (செவ்வாய்கிழமை) முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே திறந்து வைக்கிறார். இது குறித்து உயிரியல் பூங்கா குறித்து வனமேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் வாசுதேவன் கூறியதாவது:-

"564 ஹெக்டேர் பரப்பளவு பரவி உள்ள இந்த உயிரியல் பூங்கா நாட்டிலேயே பெரியது ஆகும். கோரேவாடா மீட்பு மையம் மற்றும் சரணலாயம் சேர்த்தால் இதன் பரப்பு 1,914 ஹெக்டேர் ஆகும்.

இங்கு சிறுத்தைப்புலி, கரடி, புலிகளை பொதுமக்கள் வாகனங்களில் சென்று பார்வையிட முடியும். ராஜ்குமார் என்ற ஆண் புலியும், லி என்ற பெண் புலியும் உள்ளது. மேலும் 2 புலிகளை விட திட்டமிட்டுள்ளோம். பொது மக்கள் வாகனங்களில் விலங்குகளை பார்வையிட ரூ.100 முதல் ரூ.300 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

இதில் பொது மக்கள் கண்ணாடி ஜன்னல்களால் ஆன ஏ.சி. பஸ்சில் சென்றபடி விலங்குகளை பார்த்து ரசிக்கலாம்." இவ்வாறு அவர் கூறினார்.

Next Story