மாவட்ட செய்திகள்

தலைவாசல் அருகே ஆடுகள் திருடிய 4 பேர் கைது + "||" + 4 arrested for stealing goats near thalai vasal

தலைவாசல் அருகே ஆடுகள் திருடிய 4 பேர் கைது

தலைவாசல் அருகே ஆடுகள் திருடிய 4 பேர் கைது
தலைவாசல் அருகே ஆடுகள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆடுகள் திருட்டு
தலைவாசல் அருகே வீரகனூர் லத்துவாடி காவலர் சோதனைச்சாவடி அருகில் வீரகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படியாக 2 மோட்டார் சைக்கிள்களில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு வந்தவர்களை நிறுத்தி விசாரித்தனர். 
அப்போது அவர்கள், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 21), மணிகண்டன் (19) மற்றும் 2 சிறுவர்கள் என தெரியவந்தது.
4 பேரும் வீரகனூர் சந்தைப்பேட்டையில் 2 ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்ததும், ஆடுகளை திருடிக்கொண்டு வந்ததும் தெரியவந்தது. 
4 பேர் கைது
ஆடு திருடிய 4 பேர் மீதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 2 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. பொது மக்களை மிரட்டிய 3 பேர் கைது
பொது மக்களை மிரட்டிய 3 பேர் கைது
2. சட்டக்கல்லூரி மாணவர் கொலையில் 6 பேர் கைது
மானாமதுரை போலீஸ் நிலையம் அருகே சட்டக்கல்லூரி மாணவர் கொலையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. வாலிபர் கைது
வாலிபர் கைது
5. பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.