ராமநாதபுரம் மாவட்ட மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்
ராமநாதபுரம் மாவட்ட மீத்தேன் எரிவாயு எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் சித்தார்கோட்டை ஊராட்சியில், மக்கள் சந்திப்பு பரப்புரை இயக்கம் நடைபெற்றது.
இதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெரியார் பேரவை நாகேசுவரன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் பட்டாணி மீரான், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் முகமது மன்சூர், எஸ்.டி.பி.ஐ. கட்சி தொகுதி செயலாளர் ஜமீல், புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காத்தமுத்து, வைகை பாசன விவசாய சங்க பொதுச்செயலாளர் மதுரை வீரன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற எரிவாயு எடுப்பதனால் இயற்கை அழிவதை தடுக்க முடியாது.
எனவே மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இத்திட்டத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கருத்துக்களை பதிவு செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன், வீரகுல தமிழர் படை மாநில ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story