கரூர் சனப்பிரட்டி பகுதியில் பயன்பாடின்றி கிடக்கும் அங்கன்வாடி கட்டிடம்; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


கரூர் சனப்பிரட்டி யில் பயன்பாடு இன்றி இருக்கும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை படத்தில் காணலாம்.
x
கரூர் சனப்பிரட்டி யில் பயன்பாடு இன்றி இருக்கும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 25 Jan 2021 10:09 AM IST (Updated: 25 Jan 2021 10:09 AM IST)
t-max-icont-min-icon

சனப்பிரட்டி பகுதியில் பயன்பாடு இல்லாமல் கிடக்கும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னனர்.

அங்கன்வாடி மைய கட்டிடம்
கரூர் அருகே உள்ள சனப்பிரட்டி பகுதிக்கு உட்பட்ட அக்ரஹாரம் மற்றும் குடித்தெரு உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளின் நலன் கருதி அப்பகுதியில் அங்கன்வாடி மையக்கட்டிடம் ஒன்று கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்நிலையில் அந்த அங்கன்வாடி மையத்தில் பணியாளர்கள் அமர்த்தப்பட்டு குழந்தைகள் பயன் பெற்று வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக அந்த அங்கன்வாடி மையம் திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேறு அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை
மேலும் இந்த அங்கன்வாடிமைய கட்டிடம் பயன்படுத்தாமல் உள்ளதால், பழுது அடைந்து உள்ளது. மேலும் அதன் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்தும், கட்டிடத்தை சுற்றியும் முற்கள் முளைத்து புதர் மண்டி காட்சியளிக்கிறது. எனவே பழுந்தடைந்த நிலையில் உள்ள அந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைத்து, இப்பகுதியில் அங்கன்வாடி மையத்தை மீண்டும் தொடங்க வேண்டும். அல்லது வேறு ஏதேனும் அரசு பயன்பாட்டுக்கு அந்த கட்டிடத்தை பயன்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story