2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது


2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 27 Jan 2021 6:40 AM IST (Updated: 27 Jan 2021 6:45 AM IST)
t-max-icont-min-icon

குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்

வாசுதேவநல்லூர்:

தென்காசி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாலிபர்

வாசுதேவநல்லூர் அருகே உள்ள தாருகாபுரம் முப்புடாதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமர ்பாண்டியன் மகன் மணிகண்டன் (வயது 36)இவர் மீது வாசுதேவநல்லூர், புளியங்குடி போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், புளியங்குடி துணை சூப்பிரண்டு சுவாமிநாதன், வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஆகியோர் பரிந்துரைத்தனர். அதன்பேரில் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். 

இதையடுத்து வாசுதேவநல்லூர் போலீசார் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்து  பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
கடையநல்லூர் அருகே குழந்தைகளுக்கு எதிரான வழக்கில் தொடர்புடைய வரை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மேற்கு மலம் பாட்டை தெருவில் வசிக்கும் சர்புதீன் மகன் ஜாபர்அலி (43). இவர் மீதுபல்வேறு பாலியல் வழக்குகள் உள்ளது. கடந்த மாதம் 24 -ம் தேதி தென்காசி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சரஸ்வதி இவரை பாலியல் வழக்கில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தார். இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரைத்ததன்பேரில் ஜாபர் அலியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் ஜாபர் அலியின் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து, அதற்கான உத்தரவு நகலை பாளை மத்திய சிறையில் அடைக்கப்படட ஜாபர் அலியிடம் கடையநல்லூர் போலீசார் வழங்கினர்.

Next Story