டாஸ்மாக் கடையில் கொள்ைள


டாஸ்மாக் கடையில் கொள்ைள
x

காவலாளியை அரிவாளால் வெட்டி விட்டு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை கொள்ைளயடித்து சென்ற 4 பேரை ேபாலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருதுநகர்
காவலாளியை அரிவாளால் வெட்டி விட்டு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை கொள்ைளயடித்து சென்ற 4 பேரை ேபாலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
காவலாளி 
விருதுநகர் புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விருதுநகர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மோகன் மூர்த்தி ராஜன் (வயது 19) என்பவர் காவலாளியாக உள்ளார்.
 நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்ற பிறகு மோகன் மூர்த்தி ராஜன் காவல் பணியில் இருந்தார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க 4 பேர் முக கவசம் அணிந்தபடி வந்து மோகன் மூர்த்தி ராஜனை தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு கடை பூட்டை உடைத்து உள்ளே இருந்த மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
வலைவீச்சு 
இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாக்கப்பட்ட காவலாளி மோகன் மூர்த்தி ராஜனை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.   இதுபற்றிய புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story