கிணற்றில் நீச்சல் பழகிய போது பரிதாபம் தண்ணீரில் மூழ்கி மாணவி பலி


மாணவி பலி
x
மாணவி பலி
தினத்தந்தி 27 Jan 2021 9:24 AM IST (Updated: 27 Jan 2021 9:26 AM IST)
t-max-icont-min-icon

கீரனூர் அருகே குடிநாட்டு வயலை சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மகள் வேம்பரசி (வயது 14). இவர் அப்பகுதியில் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்தார்.

கீரனூர்:

கீரனூர் அருகே குடிநாட்டு வயலை சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மகள் வேம்பரசி (வயது 14). இவர் அப்பகுதியில் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்தார். வயல்காட்டு பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற போது அங்கு உள்ள ஒரு கிணற்றில் நீச்சல் பழகுவதற்கு வேம்பரசி இடுப்பில் கயிற்றைக் கட்டி இறங்கி உள்ளார். இவருடன் வந்த அக்கா மற்றும் தம்பியிடம் மேலே கயிற்றைப் பிடித்துக் கொள்ளுமாறு கொடுத்துவிட்டு கிணற்றுக்குள் கடந்த 2 நாட்களாக நீச்சல் பழகியுள்ளார். 

இந்நிலையில் நேற்றும் அதே போல் நீச்சல் பழகிய போது மேலே நின்றவர்கள் கைத்தவறி கயிற்றைவிட்டுவிட்டதால் நீச்சல் பழகிய மாணவி கிணற்று தண்ணீரில் தத்தளித்தார். சற்று நேரத்தில் மூச்சு திணறி கிணற்றில் மூழ்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மாணவியை மீட்டபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. 

இந்த சம்பவம் குறித்து உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டார்.

Next Story