குடியரசு தின விழா கொண்டாட்டம் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்


குடியரசு தின விழாவில் தேசிய கொடியை கலெக்டர் உமாமகேஸ்வரி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொ
x
குடியரசு தின விழாவில் தேசிய கொடியை கலெக்டர் உமாமகேஸ்வரி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொ
தினத்தந்தி 27 Jan 2021 3:57 AM GMT (Updated: 27 Jan 2021 3:59 AM GMT)

புதுக்கோட்டையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி தேசிய கொடி ஏற்றினார்.

புதுக்கோட்டை:

நாடு முழுவதும் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டையில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில் நேற்று காலை 8.05 மணிக்கு தேசிய கொடியை கலெக்டர் உமாமகேஸ்வரி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். மேலும் திறந்த ஜீப்பில் சென்று அவர் பார்வையிட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உடன் இருந்தார். அதன்பின் மூவர்ண பலூன்களை கலெக்டர் உமாமகேஸ்வரி பறக்கவிட்டார். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் ஒரு ஜோடி புறாக்களை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பறக்கவிட்டனர்.

அதனை தொடர்ந்து போலீஸ் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 63 போலீசாருக்கு முதல்-அமைச்சரின் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார்.

மேலும் வருவாய்த்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்த 162 அலுவலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன், மாவட்ட ஊராட்சித்தலைவர் ஜெயலெட்சுமி, வருவாய் கோட்டாட்சியர்கள் தண்டாயுதபாணி, டெய்சிகுமார், வட்டாட்சியர் முருகப்பன், மாவட்ட வேளாண் விற்பனை குழுத்தலைவர் பாஸ்கர் உள்பட அதிகாரிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் நமணசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் ‘சாட் பேப்பரால்” காகித அட்டையில் உருவாக்கப்பட்ட இந்திய ராணுவ தளவாட மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன. இதனை கலெக்டர் உள்பட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். விழாவை தொடர்ந்து புதுக்கோட்டை மேல 3-ம் வீதியில் சுதந்திர போராட்ட தியாகி சிவப்பிரகாசத்தின் வீட்டிற்கு கலெக்டர் உமாமகேஸ்வரி நேரில் சென்று அவரது மனைவி மணிமேகலைக்கு கதர்ஆடை அணிவித்து பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். இதேபோல நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவா சுப்ரமணியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். புதுக்கோட்டை ரெயில் நிலையத்திலும் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டன.

புதுக்கோட்டை கோர்ட்டில் தேசிய கொடியை மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினத்தந்திக்கு நன்றி...

விழாவில் ஆம்புலன்சில் பல பிரசவங்கள் பார்த்து தாயையும், குழந்தையையும் நலமுடன் மருத்துவமனையில் சேர்த்த இலுப்பூர் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் தேவபாஸ்கரன், மருத்துவ உதவியாளர் பூபதிராஜா ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் பாராட்டு சான்றிதழ் பெற்ற தேவபாஸ்கரன், பூபதிராஜா ஆகியோர் இந்த பாராட்டு சான்று பெற காரணமாக இருந்த தினத்தந்திக்கும், இதை வழங்கிய மாவட்ட கலெக்டருக்கும் நன்றி தெரிவித்தனர்.


Next Story