நகரி ரெயில் போக்குவரத்து திட்டம் நிறுத்தம்


நகரி ரெயில் போக்குவரத்து திட்டம் நிறுத்தம்
x
தினத்தந்தி 27 Jan 2021 9:39 PM IST (Updated: 27 Jan 2021 9:39 PM IST)
t-max-icont-min-icon

நகரி ரெயில் போக்குவரத்து திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது

ராணிப்பேட்டை

சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட செங்கல்பட்டு முதல் ராணிப்பேட்டை ரெயில்வே நிலையம் வரை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ ஆய்வு செய்தார்.

பின்னர்  மாலையில் ராணிப்பேட்டை ரெயில் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

நிதி இல்லாததால் நிறுத்தப்பட்டது

கொரோனா காரணமாக சில மாதங்கள் காலதாமதமாக இந்த ஆய்வு நடைபெறுகிறது. ராணிப்பேட்டையில் இருந்து சரக்கு போக்குவரத்து ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்குள்ள தொழிற்சாலைகள் பயன் பெறும். சரக்கு போக்குவரத்து ரெயில் சேவையினால் எதிர்காலத்தில் ரெயில்வேத் துறைக்கு வருவாய் அதிகரிக்கும். 

திண்டிவனம் முதல் நகரி வரையிலான ரெரயில் போக்குவரத்து சேவை உள்ளிட்ட பல திட்டங்கள் தொடகப்பட்டிருந்த போதிலும் போதிய நிதி இல்லாத காரணத்தினால், தற்போது அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இது குறித்து பரிசீலிக்கப்படும்.

பயணிகள் ரெயில் சேவை இல்லை

ராணிப்பேட்டை முதல் சென்னை வரையிலான பயணிகள் ெரயில் சேவைக்கு தற்போது திட்டம் எதுவும் இல்லை. பின்னர் இது குறித்து பரீசலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story