கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்கக்கோரி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்கக்கோரி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2021 11:31 AM IST (Updated: 28 Jan 2021 11:31 AM IST)
t-max-icont-min-icon

கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்கிட கோரி திருவாரூரில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர், 

திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல அலுவலகம் முன்பு ஏ.ஐ.டியூ.சி. தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார், புண்ணீஸ்வரன், மாநில இணை செயலாளர் ஜெ.குணசேகரன், மாநில தலைவர் சாமிக்கண்ணு, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பணி நிரந்தரம்

ஆர்ப்பாட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் நெல்லை முழுமையாக கொள்முதல் செய்ய போதிய வசதி செய்து தர வேண்டும். கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.20 ஆயிரம் நிர்ணயித்து வழங்க வேண்டும்.

சுமை தூக்்கும் தொழிலாளர்களுக்கு எடைகூலி மற்றும் ஏற்றுகூலி தனியாருக்கு இணையாக முட்டை ஒன்றுக்கு ரூ.15 வழங்க வேண்டும். தகுதியுடைய கொள்முதல் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

Next Story