சாத்தான்குளம் அருகே மீனவர் தற்கொலை
குடிக்கும் பழக்கம் பெற்றோர்-மனைவி கண்டித்ததால் மீனவர் தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே பெரியதாழை சேவியர் காலனியைச் சேர்ந்தவர் ரினிஷ் (வயது 29). மீனவர். இவருடைய மனைவி ஜஸ்பா. இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது. ரினிசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனை மனைவி மற்றும் பெற்றோர் கண்டித்தனர்.
இதனால் மனமுடைந்த ரினிஷ் கடந்த 24-ந்தேதி தனது வீட்டில் உள்ள அறையில் திடீரென்று தூக்குப்போட்டு தொங்கினார். உடனே அவரை குடும்பத்தினர் காப்பாற்றி சிகிச்சைக்காக திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு ரினிசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இரவில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story