மோட்டார் சைக்கிளில் திடீர் தீ


வெம்பக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் திடீரென தீபிடித்த எரிந்த காட்சி.
x
வெம்பக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் திடீரென தீபிடித்த எரிந்த காட்சி.
தினத்தந்தி 28 Jan 2021 11:58 PM IST (Updated: 28 Jan 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தாயில்பட்டி, 

சித்துராஜாபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 40). இவர் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போட்டுவிட்டு வெம்ப கோட்டை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது செல்லையாபுரம் பஸ் ஸ்டாப்பில் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தீ வந்தது. உடனே அவர் வண்டியை நிறுத்தினார். இதுகுறித்து வெம்பக்கோட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தையா, அதிகாரி சாகுல்ஹமீது ஆகியோர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வண்டி முற்றிலும் நாசமானது.

Next Story