தைப்பூச தீர்த்தவாரி பெருவிழா


நயினார் கோவில் அருகே வைகை ஆற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி பெருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.
x
நயினார் கோவில் அருகே வைகை ஆற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி பெருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.
தினத்தந்தி 29 Jan 2021 12:00 AM IST (Updated: 29 Jan 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

நயினார்கோவில் அருகே தைப்பூச தீர்த்தவாரி பெருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நயினார்கோவில்.

நயினார்கோவில் அருகே தைப்பூச தீர்த்தவாரி பெருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் உள்ள ஸ்ரீ நாகநாதர், சவுந்தரநாயகி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதிஉலா வந்து சின்ன அக்கிரமேசி அருகே உள்ள மஞ்சக்கொல்லை, சிரகிகோட்டைக்கு இடையே உள்ள வைகை ஆற்றங்கரையில் வருடந்தோறும் எழுந்தருளி தீர்த்தவாரி பெருவிழா நடைபெறுவது வழக்கம். 
விழாவை முன்னிட்டு சின்ன அக்கிரமேசி, மஞ்சக்கொல்லை சிரகிகோட்டையிலுள்ள, தேவஸ்தானத்துக்கு சொந்தமான இடங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அதில் விளையும் காய்கறிகளை சுவாமி தீர்த்தம் ஆடும் போது படைப்பர். இந்த வருடமும் சிறப்பான முறையில் தைப்பூச தீர்த்தவாரி பெருவிழா நடைபெற்றது. முன்னதாக சுவாமி அம்பாளுடன் காலை மஞ்சக்கொல்லை சிரகிகோட்டை குணந்தீஸ்வரர் கோவில் அருகே எழுந்தருளி அருள்பாலித்தார்.

விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காய்கறிகளை சுவாமிக்கு படைத்ததோடு, மொட்டை அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆடுகள், கோழிகள் ஆகியவற்றையும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து வைகையாற்றில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். அதன்பின்னர் நயினார்கோவில் நாகநாதர் ஆலயத்திற்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது.

Next Story