தடையை மீறி டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட மேலும் 4 பேர் கைது


தடையை மீறி டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட மேலும் 4 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2021 12:07 AM IST (Updated: 29 Jan 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் தடையை மீறி டிராக்டா் பேரணியில் ஈடுபட்ட ேமலும் 4 ேபா் கைது செய்யப்பட்டனா்.

7 பிாிவின் கீழ் வழக்கு 
வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி திருவாரூாில் தடையை  மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் தடையினை மீறி டிராக்டர் பேரணி நடத்திய பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. உள்பட 14-க்கும் மேற்பட்டவர்கள் மீது கொலை முயற்சி, பொதுசொத்தை சேதப்படுத்துதல் உள்பட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த வழக்கில் தம்புசாமி, பாரதி, துரைராஜ் ஆகிய 3 பேரை போலீசாா்  கைது செய்தனர். 

4பேர் கைது
இந்தநிலையில் நேற்று இந்த வழக்கில் தொடா்புடைய தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் பூண்டி.கலைவேந்தன், ஞானராஜ், சிவசங்கரன் மற்றும் ஹரி ஆகிேயாரை திருவாரூர் தாலுகா போலீசாா் கைது செய்தனா். பின்னா்  பேரணியில் பயன்படுத்தப்பட்ட 4 டிராக்டர்கள் போலீசாாிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் பூண்டி.கலைவேந்தன் முன்னாள் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைச்செல்வன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story