மங்களமேடு அருகே மின்கசிவால் 2 கூரை வீடுகள் தீப்பற்றி எரிந்தன; 30 பருத்தி மூட்டைகள்- பொருட்கள் நாசம்


மங்களமேடு அருகே மின்கசிவால் 2 கூரை வீடுகள் தீப்பற்றி எரிந்தன; 30 பருத்தி மூட்டைகள்- பொருட்கள் நாசம்
x
தினத்தந்தி 29 Jan 2021 1:39 AM IST (Updated: 29 Jan 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

மங்களமேடு அருகே மின்கசிவால் 2 கூரை வீடுகள் தீப்பற்றி எரிந்ததில், 30 பருத்தி மூட்டைகள் மற்றும் பொருட்கள் நாசமாயின.

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மங்களமேடு அருகே உள்ள வயலப்பாடி வ.கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி(வயது 65). இவர் அப்பகுதி கூரை வீட்டில் வசித்து வந்தார். இவருடைய வீட்டின் அருகே அவருடைய மகன் தங்கமணியின்(35) கூரை வீடு உள்ளது. நேற்று மதியம் 1 மணி அளவில் மின்கசிவு காரணமாக 2 கூரை வீடுகளிலும் தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தங்கமணியின் மனைவி கவிதா, தனது 3 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தார். இது பற்றி தகவல் அறிந்து, அங்கு வந்த வேப்பூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 2 வீடுகளில் இருந்த பொருட்கள், தங்கமணியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 30 பருத்தி மூட்டைகள் ஆகியவை எரிந்து நாசமாயின.

Next Story