10-ம் வகுப்பு மாணவி கடத்தல்; போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது


10-ம் வகுப்பு மாணவி கடத்தல்; போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 29 Jan 2021 5:54 AM IST (Updated: 29 Jan 2021 5:55 AM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தியதாக போக்சோ சட்டத்தில் கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

நல்லம்பள்ளி,


நல்லம்பள்ளி அடுத்த ஜருகு கடுக்கக்காரன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 25), கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவியை கடந்த 24-ந் தேதி  கடத்தி சென்று விட்டதாக  கூறப்படுகிறது. 

இது குறித்து அந்த மாணவியின் தாயார், தொப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடினர். இந்த நிலையில் கடத்தப்பட்ட மாணவியுடன், முத்து கோவையில் இருப்பது  உறவினர்களுக்கு தெரியவந்தது. 

கைது

இதைத்தொடர்ந்து உறவினர்கள் முத்து மற்றும் கடத்தப்பட்ட மாணவியை மீட்டு தொப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து பள்ளி மாணவியை கடத்தியதாக, கூலித்தொழிலாளி முத்து மீது போக்சோ சட்டத்தில் தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 
மீட்கப்பட்ட பள்ளி மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கைதாகி உள்ள முத்துக்கு, ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 1½ வயதில் பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story