திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை பிரிவு


திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை பிரிவு
x
தினத்தந்தி 29 Jan 2021 4:58 AM GMT (Updated: 29 Jan 2021 4:58 AM GMT)

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை பிரிவினை முதல்வர் முத்துக்குமரன் தொடங்கி வைத்தார்

திருவாரூர், 

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறிய குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை பிரிவினை முதல்வர் முத்துக்குமரன் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிதாக தொடங்கப்பட்டுள்ள சிறிய குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை பிரிவு மூலம் பிறந்த குழந்தை முதல் 12 வயது குழந்தைகள் வரை பயன் அடைவார்கள். இங்கு குடலிறக்கம், விரைவீக்கம், குடல்வால்வு, சிறுநீரக பிரச்சினைகளுக்கான அறுவை சிகிச்சை செய்யப்படும்.

பொதுமக்கள் பயன்படுத்தி

இந்த சிகிச்சைக்காக தஞ்சை, திருச்சி மற்றும் சென்னை போன்ற பகுதிக்கு செல்லும் நிலையில் தற்போது மக்கள் வசதிக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் துணை முதல்வர் ராஜாராம், துணை கண்காணிப்பாளர் அன்சாரி, குழந்தைகள் நலத்துறை டாக்டர் ராஜா மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் அப்துல் ஹமீது அன்சாரி, நிலைய மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன், குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் கொளஞ்சியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story