தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் இன்று காலை தர்ணா போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் இன்று காலை தர்ணா போராட்டம் நடத்தினர்.
தர்ணா போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று தர்ணா போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மரியம்மாள் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்திரா கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். சி..ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, துணை தலைவர் ராமமூர்த்தி, அங்கன்வாடி ஊழியர் உதவியாளர் சங்க முன்னாள் மாநில செயலாளர் அந்தோணியம்மாள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.
கோரிக்கைகள்
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு வரன்முறை படுத்தப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
சட்டப்பூர்வ பென்சன், குடும்ப பென்சன் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது கருணை தொகை அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story