குடியாத்தம்:குடிநீர் பிரச்சினை தீர்க்கக்கோரி பானை உடைப்பு போராட்டம்
குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு குடிநீர் பிரச்சினை தீர்க்கக்கோரி பானை உடைப்பு போராட்டம் நடந்தது.
குடியாத்தம்,
குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு குடிநீர் பிரச்சினை தீர்க்கக்கோரி பானை உடைப்பு போராட்டம் நடந்தது.
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் தட்டப்பாறை பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் பழுதடைந்த ஆழ்துளை கிணற்றை சீரமைத்து சிறுமின்விசை தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தியும், மூங்கப்பட்டு ஊராட்சி பொன்னாங்கட்டியூர் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க புதிய குடிநீர் குழாய் அமைக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பானை உடைப்பு போராட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கே.சாமிநாதன் தலைமை தாங்கினார் போராட்டத்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சி.ஏ.ஏகாம்பரம் தொடங்கி வைத்தார்.
இதில் கட்சி நிர்வாகிகள் குணசேகரன், தண்டபாணி, சரவணன், சிலம்பரசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் துரை செல்வம் ஆகியோர் பேசினர். குடியாத்தம் நகர செயலாளர் காத்தவராயன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்,
பெண்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பானை உடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
காலை 10.30 மணி அளவில் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் காலை 9 மணிக்கு 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் பகல் 12.30 மணிக்கு தான் பானை உடைப்பு போராட்டத்தை தொடங்கினர். இதனால் பல மணி நேரம் போலீசார் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது
Related Tags :
Next Story