ஜோலார்பேட்டை நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
ஜோலார்பேட்டை அருகே நடுரோட்டில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே நடுரோட்டில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவருக்கு சொந்தமான காரை அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் வெங்கடேஷ் என்பவர் குடியாத்தம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வாங்கி கொண்டு இன்று மாலை புறப்பட்டார்.
காரை வெங்கடேஷ் ஓட்டினார். காரில் உறவினர் அரவிந்த் மற்றும் கல்லூரி மாணவிகள் சந்தியா, காவியா ஆகிய 4 பேரும் வந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நோக்கிச் செல்லும் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தபோது காரின் என்ஜின் முன்பகுதியில் திடீரென வெடி சத்தம் கேட்டது.
உடனடியாக சாலை நடுவில் நிறுத்திவிட்டு காரில் இருந்து 4 பேரும் கீழே இறங்கி பாதுகாப்பு இடத்திற்கு சென்றனர், சிறிது நேரத்தில் கார் மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனால் சாலையில் இருபுறமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 10 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது.
தீ முழுவதும் அணைத்தபிறகு அங்கிருந்த பொதுமக்கள் காரை அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் நீண்ட வரிசையில் நின்ற பஸ், லாரிகள் புறப்பட்டு சென்றது.
இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story