திருக்கோவிலூர் பகுதியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது


திருக்கோவிலூர் பகுதியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2021 9:30 PM IST (Updated: 29 Jan 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் பகுதியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி, இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன் மற்றும் உலகநாதன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருக்கோவிலூர் தாசர்புரம் மாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த திருக்கோவிலூர் புதுத்தெருவைச் சேர்ந்த குரு என்கிற குருராஜன்(வயது 30), தாசர்புரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த தாஸ் என்கிற முருகதாஸ்(45) ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம்  இருந்து ஒரு கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் திருக்கோவிலூரை அடுத்துள்ள செவலை ரோடு வீரட்டகரம் மதுரா ஐதராபாக்கம் முருகன் கோவில் எதிரே கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த வீரட்டகரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் வல்லரசு(21) தட்சிணாமூர்த்தி மகன் விஷ்வா(20) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய எல்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story