திருச்செங்கோடு அருகே கார் தீப்பிடித்து எரிந்தது


திருச்செங்கோடு அருகே கார் தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 29 Jan 2021 10:18 PM IST (Updated: 29 Jan 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோடு அருகே என்ஜினீயரின் கார் திடீர் என தீப்பிடித்து எரிந்தது

எலச்சிபாளையம்:

ஈரோடு திண்டல் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 21). என்ஜினீயரான இவர் கட்டிட காண்டிராக்டர் பணிகளை செய்து வருகிறார். நேற்று நள்ளிரவு இவர் காரில் ராசிபுரத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார். 

அப்போது திருச்செங்கோடு அருகே தென்னம்பாளையம் பகுதியில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து காரில் இருந்து வெளியேறிய இவர் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

 இதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story