நர்சுகள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்


நர்சுகள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2021 10:56 PM IST (Updated: 29 Jan 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு நர்சுகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

ஆண்டிப்பட்டி:

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு நர்சுகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். 

இதற்கு நர்சு சங்க மாநில அமைப்பு செயலாளர் ஜோஸ்வின் ஜென்னி தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசு நர்சுகளுக்கு இணையான ஊதியம் தமிழகத்தில் உள்ள நர்சுகளுக்கு வழங்கவேண்டும். 

5 கட்ட காலமுறை ஊதிய உயர்வு, கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நர்சுகள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். 

Next Story