அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
தென்காசியில் அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
தென்காசி மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாவட்ட தலைவி தேவி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சுப்புலட்சுமி, திருப்பதி, சரோஜா, விஜயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கோட்டை வட்ட கிளை தலைவி தாயம்மாள் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ஞானம்மாள், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர் திருமலை முருகன் ஆகியோர் பேசினார்கள். இதில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story