பாளையங்கோட்டையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


பாளையங்கோட்டையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2021 3:35 AM IST (Updated: 30 Jan 2021 3:35 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் செவிலியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாநில துணை தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மத்திய அரசின் செவிலியர்களுக்கு இணையாக தமிழக அரசின் செவிலியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். 5 கட்ட காலமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில துணை தலைவர் கீதா கிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் ஏராளமான செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர்.

Next Story