புதுக்கோட்டையில் அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஆர்ப்ப
x
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஆர்ப்ப
தினத்தந்தி 30 Jan 2021 6:40 AM IST (Updated: 30 Jan 2021 6:40 AM IST)
t-max-icont-min-icon

அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்துக்கு சங்க வட்டார செயலாளர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சந்திரா முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் தேவமணி சிறப்புரையாற்றினார். 

சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், துணைத் தலைவர் முகமது அலி ஜின்னா, கட்டுமான ஊழியர்களின் சங்க பொதுச்செயலாளர் மணவாளன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலை படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

பணிக்கொடை
 ஓய்வு பெறும் பொழுது ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும். ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை 7-வது ஊதியக் குழுவின் படி அரசு ஊழியராக அறிவிக்கப்படும் என்று கூறியதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


Next Story