ரூ.15 கோடி செல்போன் கொள்ளை: திரிபுராவை சேர்ந்த 2 பேர், ஓசூர் கோர்ட்டில் சரண்
ரூ.15 கோடி செல்போன் கொள்ளை வழக்கில் திரிபுராவை சேர்ந்த 2 பேர் ஓசூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
ஓசூர்:
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் இருந்து, மும்பைக்கு ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி, ஓசூர் அருகே மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த அக்டோபர் மாதம் சென்றது. அப்போது மர்ம நபர்கள் லாரி டிரைவரை தாக்கி விட்டு செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தநிலையில் செல்போன்கள் கொள்ளை வழக்கில் தொடர்புடைய திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஜாகித் (வயது 26), சஜகான்மைசன் (33) ஆகிய 2 பேரும் ஓசூர் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி தாமோதரன் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்களை கிருஷ்ணகிரி கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.
Related Tags :
Next Story