காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததால் என்ஜினீயர் தற்கொலை
இளையான்குடி அருகே காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததால் விரக்தி அடைந்த என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இளையான்குடி,
இளையான்குடி அருகே காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததால் விரக்தி அடைந்த என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
என்ஜினீயர்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் சங்குத்துறை. இவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 25). என்ஜினீயர். இவர் தற்போது வேலை தேடி வந்து உள்ளார்.
இந்த நிலையில் தினேஷ்குமார் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணுக்கு சமீபத்தில் தான் வேறு ஒருவருடன் திருமணம் நடந்து முடிந்து உள்ளது. இதனால் அவர் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்து உள்ளார்.
விஷம் குடித்து தற்கொலை
இந்த நிலையில் கொங்கம்பட்டி விலக்கில் தமிழ்நகர் பகுதியில் காலி இடத்தில் விஷம் குடித்த நிலையில் தினேஷ்குமார் மயங்கி கிடந்தார். இது பற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் அங்கு விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது தாய் ராேஜஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததால் விரக்தியில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story