ராமேசுவரத்தில் திடீர் பலத்த மழை
ராமேசுவரத்தில் திடீரென பலத்த மழை பெய்தது
ராமேசுவரம்,
வடகிழக்கு பருவ மழை சீசனில் ராமேசுவரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் அதிக அளவு மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை சீசன் முடிந்து 10 நாட்கள் ஆன நிலையில் ராமேசுவரம் பகுதியில் திடீரென நேற்று காலை 7 மணி முதல் சுமார் 45 நிமிடத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் சிறிது நேரம் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.
பலத்த மழையால் கோவில் பஸ் நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியான ராமதீர்த்தம் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. அந்த பகுதியில் மழைநீர் செல்லும் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலை பகுதியிலேயே தேங்கி நின்றது.
இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மழை நீரில் தத்தளித்த படி சென்றன. இதேபோல் தங்கச்சிமடத்தில் பெய்த பலத்த மழையால் பேய்க்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபம் முன்பும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
Related Tags :
Next Story