அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்


ராமநாதபுரத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தபோது எடுத்த படம்.
x
ராமநாதபுரத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தபோது எடுத்த படம்.
தினத்தந்தி 30 Jan 2021 7:51 PM IST (Updated: 30 Jan 2021 7:51 PM IST)
t-max-icont-min-icon

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

ராமநாதபுரம், 

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி ராமநாதபுரம் நகர், புறநகர், போக்குவரத்து பணிமனைகளின் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 
நகர்கிளையில் நடைபெற்ற போராட்டத்திற்கு எல்.பி.எப்.பை சேர்ந்த வின்சென்ட் அமலதாஸ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. பாஸ்கரன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி, எல்.பி.எப்.பை சேர்ந்த துரைராஜ், ராஜாமணி, சி.ஐ.டி.யு. ஜெயக்குமார்  உள்பட பலர் கலந்து கொண்டனர். 

ராமநாதபுரம் புறநகர் பணிமனையில் எல்.பி.எப்.பை சேர்ந்த செல்வக்குமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பாஸ்கரன், சி.ஐ.டி.யு. செந்தில், எல்.பி.எப்.பை சேர்ந்த கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

Next Story