வால்பாறையில்குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
வால்பாறை எஸ்டேட் குடியிருப்புக்குள் புகுந்து காட்டுயானைக்கூட்டம் அட்டகாசம் செய்தன. இதனால் தோட்ட தொழிலாளர்களின் வீடுகள் சேதமடைந்தன.
வால்பாறை
வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு எஸ்டேட் முதல் பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நள்ளிரவில் 7 யானைகள் கொண்ட கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்தன. இந்த யானைகள் கூட்டம் ஆளில்லாத தோட்ட அதிகாரியின் வீட்டை இடித்து உள்ளே புகுந்தது.
ஆனால் அந்த வீட்டில் சாப்பிடுவதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த யானைகள் அருகில் இருந்த தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்தியது.
குறிப்பாக முனியாண்டி என்ற தொழிலாளியின் வீட்டின் கதவு, ஜன்னலை உடைத்து ஜன்னல் வழியாக துதிக்கையை உள்ளே விட்டு உணவுப்பொருட்கள் இருக்கிறதா என்று தேடியது. ஆனால் வீட்டில் யாரும் இல்லை. இதனால் துதிக்கையால் வீட்டுக்குள்ளிருந்த அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தியது.
மேலும் முன்கதவை உடைத்தது. இதனை தொடர்ந்து உடைந்து விழுந்த கதவு வழியாக குட்டி யானை ஒன்று உள்ளே நுழைந்தது. பின்னர் வீட்டில் இருந்த பொருட்களை அந்த யானை எடுத்து வீசியது.
இந்த நிலையில் வீடு திரும்பிய முனியாண்டி வீட்டுக்கு சென்று பார்த்த போது அனைத்து பொருட்களையும் யானைகள் உடைத்து சேதப்படுத்தியிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அந்த யானைகள் கூட்டம் தொடர்ந்து அதே பகுதியில் முகாமிட்டு இருப்பதால் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story