கடலூர் மாவட்டத்தில்மத்திய தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்


கடலூர் மாவட்டத்தில்மத்திய தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2021 10:35 PM IST (Updated: 30 Jan 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து பணிமனைகள் முன்பு மத்திய தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூா். 

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்கி பேசி, தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கத்தினர் கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எல்.பி.எப். தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. பொருளாளர் அரும்பாலன் வரவேற்றார். எம்.எல்.எப். கோவிந்தராஜ், எல்.பி.எப். ஏழுமலை, சி.ஐ.டி.யு. ஆராவமுது, ஏ.ஏ.எல்.எல்.எப். தட்சிணாமூர்த்தி, ஐ.என்.டி.யு.சி. குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக எல்.பி.எப். ஜெயராவ், சி.ஐ.டி.யு. கண்ணன், எம். எல். எப். ரமேஷ், ஏ.ஏ.எல்.எல்.எப். ராஜாங்கம், சி.ஐ.டி.யு. பெரியசாமி, ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். 

இதில் எம்.எல்.எப். பாலகிருஷ்ணன், எல்.பி.எப். கோபாலகிருஷ்ணன், சம்மேளன துணைத்தலைவர் பாஸ்கரன், ஏ.ஏ.எல்.எல்.எப். பொது செயலாளர் கருணாநிதி, எம்.எல்.எப். மாநில செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் எம்.எல்.எப். தலைவர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.

சிதம்பரம்

இதே கோரிக்கையை வலியுறுத்தி சிதம்பரம் மணலூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்திற்கு தொழில்நுட்ப செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். தொ.மு.ச. மண்டல பொருளாளர் பால.செந்தில்நாதன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். பணிமனை தலைவர் சேகர் வரவேற்றார். 
தொழிற்சங்க நிர்வாகிகள் பாட்ஷா என்கிற ராஜேந்திரன், மணிவண்ணன், கோபிநாதன், ராஜமாணிக்கம், தனபால், செல்வராஜ் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் நிர்வாகிகள் வேல்முருகன், அறிவுச்செல்வன், காசி விஸ்வநாதன், மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திட்டக்குடி, விருத்தாசலம்

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டுக்குழு சார்பில் திட்டக்குடி போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யு. மணிகண்டன், தொ.மு.ச. பெருமாள், சின்னதுரை, ஏ.ஏ.எல்.எல்.எப். கனகசபை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் விருத்தாசலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மண்டல துணை தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. துணைத்தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்றார். இதில் எல்.பி.எப். செல்வராஜன், சூரசங்கு, வேல்முருகன், சி.ஐ.டி.யு. நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, வடலூர், பண்ருட்டி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிமனைகள் முன்பும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Next Story