லால்குடி பகுதியில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார்; நெல் கொள்முதல் நிலையங்களை காலதாமதமின்றி திறக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை


லால்குடி பகுதியில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார்; நெல் கொள்முதல் நிலையங்களை காலதாமதமின்றி திறக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 31 Jan 2021 3:12 AM IST (Updated: 31 Jan 2021 3:12 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி பகுதியில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. எனவே நெல் கொள்முதல் நிலையங்களை காலதாமதமின்றி திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லால்குடி ஒன்றியத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவை இன்னும் ஒரு சில நாட்களில் அறுவடை செய்யும் நிலையில் உள்ளன. லால்குடி ஒன்றியத்தில் பூவாளூர், செம்பரை, அன்பில், செங்கரையூர், வாளாடி, மாந்துறை, திருமங்கலம், இடையாற்று மங்கலம் உள்ளிட்ட ஊர்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

கடந்த ஆண்டு அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களில் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டு சாக்கு பற்றாக்குறையாலும் நெல் கொள்முதல் நிலையங்களில் லாரிகள் வராததாலும் தேக்கமடைந்தன. இதனால் விவசாயிகள் 10 நாட்களுக்கும் மேலாக அவற்றை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்தநிலையில் தற்போது லால்குடி ஒன்றியத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு இன்னும் ஒரு சில நாட்களில் அறுவடை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. எனவே, விவசாயிகளின் அறுவடை செய்யும் நெல்லை உடனே விற்பனை செய்ய ஏதுவாக நெல் கொள்முதல் நிலையங்களில் காலதாமதமின்றி திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story