இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் தந்தை உடலை அரசு ஆஸ்பத்திரியில் விட்டு சென்ற மகள்
இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் தந்தை உடலை அவருடைய மகள் அரசு ஆஸ்பத்திரியில் விட்டுச்சென்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ெசக்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் பார்வதி நாதன் (வயது 60). தொழிலாளியான இவரது சொந்த ஊர் நெல்லை தச்சநல்லூர் ஆகும். காசநோயால் அவதிப்பட்ட இவரை, சிகிச்சைக்காக அவரது மகள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 29-ந்தேதி சேர்த்தார். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய பணம் இல்லாததால் மன வேதனை அடைந்த பார்வதி நாதனின் மகள், அவருடைய உடலை வாங்காமல் ஆஸ்பத்திரியிலேயே விட்டுச்சென்றார். இதுபற்றி தகவல் அறிந்த அரசு ஆஸ்பத்திரி போலீசார், நெல்லையில் உள்ள பார்வதிநாதனின் சகோதரர் சங்கரை தொடர்பு கொண்டு அவருடைய உடலை பெற்றுச்செல்லும்படி தகவல் கொடுத்தனர்.
Related Tags :
Next Story