மலைக்கோட்டை பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மலைக்கோட்டை பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது
மலைக்கோட்டை,
திருச்சி மலைக்கோட்டை பகுதியிலுள்ள பெரியகடைவீதி, சின்ன கடை வீதி, மலைவாசல், நந்தி கோவில் தெரு, தெப்பகுளம் பர்மா பஜார் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கடைகள் உள்ளன. மேலும் இந்த பகுதியில் சாலையோரத்தில் தரைக்கடைகளும் ஏராளமாக உள்ளன. இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் அனுப்பியுள்ளனர். இதையடுத்து நேற்று மாநகராட்சி அதிகாரிகள் திடீரென இந்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக வந்தனர். அப்போது பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. மேலும் அனுமதி உள்ள கடைகளுக்கு முன்பு போடப்பட்டு இருந்த ஆக்கிரமிப்புகள், தரை கடைகளை ஆக்கிரமித்து கடைகளுக்கு மேலே சாலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வைத்திருந்த தார்பாய்கள் அகற்றப்பட்டன. இதனால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமமின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story